திருச்சி: தை மகாளய அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கலக்குடிப்பட்டியைச் சேர்ந்த பெண்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றபோது பின்னால் சென்னையிலிருந்து வந்த அதிவேக சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,14-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதி வேகத்தில் வந்த சொகுசு கார் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியபோது காவல் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர்.
பின்னர் கொள்ளிடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்துவதற்காகக் கொண்டுசென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:காதலி இறந்த சோகத்தில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த காதலன்