ETV Bharat / state

பேரிடர் காலத்தில் படகாக மாறும் படுக்கை; என்ஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு - nit professor has invention

திருச்சியில் பேரிடர் காலத்தில் படகாக மாற்றி கொள்ளும் வகையிலான படுக்கையை திருச்சி என்ஐடி பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

என்ஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

author img

By

Published : Nov 5, 2022, 2:33 PM IST

திருச்சி: பருவமழை காலங்களில் பல்வேறு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் காலகட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதும், மக்கள் வெள்ளத்தில் சிக்குவதும், பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.

வெள்ளக்காலங்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், குழந்தைகளை மீட்பது சவால் நிறைந்த பணியாக உள்ளது. வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கி வெளியே வர முடியாமல் தவிப்பவர்களை படகில் சென்று தான் மீட்கிறார்கள்.

அது போன்ற காலகட்டங்களில் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் படுக்கை, இருக்கை, படகு என 3 அம்சங்களும் பொருந்தும் வகையில் புதியதொரு கண்டுபிடிப்பை திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் எஸ்.முத்துகுமரன் வடிவமைத்துள்ளார்.

என்ஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சித்துறை புல முதன்மையரும், உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் பிரிவு பேராசிரியருமான இவர், கிட்டத்தட்ட 1½ ஆண்டு ஆய்வுக்கு பிறகு, பாலிமர் மேட்ரிக்ஸ், கண்ணாடி இழை, செயற்கை இழை, ஃபைபர், ஸ்டீல், மூங்கில் ஆகியவற்றை கொண்டு இதை வடிவமைத்ததாக கூறி உள்ளார்.

இதை இருவர் சராசரியாக படுக்கும் வகையில் கட்டிலாக பயன்படுத்தலாம் அல்லது அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களில் பலர் அமரக்கூடிய பர்னிச்சர் (இருக்கை) ஆகவும் பயன்படுத்தலாம். மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்தால் இந்த அமைப்பை உடனடியாக தலைகீழாக திருப்பி படகுபோல மாற்றி கொள்ள முடியும்.

இது தண்ணீரில் படகுபோல மிதந்து செல்லும். இதை இயக்குவதற்காக இரண்டு துடுப்புகளும் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்.ஐ.டி.க்கு வந்த மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ்சர்கார் இந்த புதிய கண்டுபிடிப்பை பார்த்து பாராட்டியுள்ளார்.

மேலும், இதை வடிவமைக்க ரூ.15 ஆயிரம் செலவானதாகவும், இன்னும் எளிமையுடன் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் வடிவமைக்க முடியும் என்று பேராசிரியர் முத்துகுமரன் கூறியுள்ளார். அவரின் இந்த கண்டுபிடிப்பினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.