ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியில் புதிய திட்டத்தை கைவிட கோரிக்கை

திருச்சி: நெடுஞ்சாலைத்துறையில் அனைத்து ஒப்பந்த பணிகளையும் ஒரே நபருக்கு வழங்கும் நடைமுறையை அமல்படுத்தக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி
National highway contract workers meeting
author img

By

Published : Dec 30, 2019, 10:57 AM IST

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்க முன்னாள் தலைவர் திரிசங்கு தலைமை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் திரிசங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், ’நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பாக எடுத்துள்ள புதிய முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது புதிய மாவட்டத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்குவது, அந்த ஒப்பந்ததாரர் மட்டுமே அந்த பணியை ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ள முடியும் என்ற பிபிஎம்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதனால் மீதமுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கவில்லை. இந்த நடைமுறை தற்போது தஞ்சை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 693 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒப்பந்ததாரர் அமைத்து பராமரிப்பு செய்வது என அனைத்து பணிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனால் அங்குள்ள மொத்த ஒப்பந்ததாரர்களும், அவர்களை நம்பியுள்ள பணியாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதே நடைமுறை இதர மாவட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள், லட்சக்கணக்கான பணியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்க முன்னாள் தலைவர் திரிசங்கு செய்தியாளர்கள் சந்திப்பு

அதனால் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு முன்பு இருந்தது போல அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விரைவில் முதலமைச்சரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்’ என்றார்.

இதையும் படிக்க: ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் முறை - வாகன ஓட்டிகள் வரவேற்பு!

Intro:அனைத்து ஒப்பந்த பணிகளையும் ஒரே நபருக்கு வழங்கும் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என்று நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். Body:திருச்சி:
அனைத்து ஒப்பந்த பணிகளையும் ஒரே நபருக்கு வழங்கும் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என்று நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்க முன்னாள் தலைவர் திரிசங்கு தலைமை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் திரிசங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் ஆலோசனை சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பாக எடுத்துள்ள புதிய முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது புதிதாக ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்குவது, அந்த ஒப்பந்ததாரர் மட்டுமே அந்த பணியை 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள முடியும் என்ற பிபிஎம்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்க முடியாது. இந்த நடைமுறை தற்போது தஞ்சை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 693 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒப்பந்ததாரர் அமைத்து, பராமரிப்பு செய்வது என அனைத்து பணிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மொத்த ஒப்பந்த தாரர்களும், அவர்களை நம்பியுள்ள பணியாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதே நடைமுறை இதர மாவட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள், லட்சக்கணக்கான பணியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு, முன்பு இருந்தது போல் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விரைவில் முதலமைச்சரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.