திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவர், ”மகாராஷ்டிராவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மறு தேர்தலை நடத்த வேண்டும். மாறாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அது மக்கள் விரும்பிய ஆட்சியாக இருக்காது” என்றார்.
அதேபோல் சிவாஜியின் நிலைதான் ரஜினி, கமலுக்கு ஏற்படும் என்று முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துதான் முதலமைச்சரானர். மக்கள் ஓட்டுப்போட்டு அவர் முதலமைச்சர் ஆகவில்லை.
மேலும், சிவாஜி கணேசன் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கூட்டணி அமைத்ததால்தான் தோல்வியடைந்தார். ஒருவேளை அவர் சரியான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'பலமுறைப் பயன்படுத்தும் செயற்கைக்கோள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது' - மயில்சாமி அண்ணாதுரை