ETV Bharat / state

"காவிரி நீரைப் பெற திமுகவுடன் சேர்ந்து காங்கிரஸும் போராடும்" - எம்.பி திருநாவுக்கரசர் உறுதி! - cauvery water issue

காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரஸும் போராட்டத்தில் ஈடுபடும் என எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

mp Thirunavukkarasar
எம்.பி திருநாவுக்கரசர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 10:21 AM IST

திருச்சி மாநகராட்சி உறையூர் குறத்தெரு நடுநிலைப்பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து தங்களது குறைகளை தெரிவித்தனர்.

மேலும் இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, புத்தூர் சார்லஸ், பட்டேல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், "தமிழ்நாடு முதலமைச்சர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக் கல்வியை மேம்படுத்த, அவரவர் காலக்கட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எங்குமே இல்லாத காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 14 லட்சம் குழந்தைகள் இதன் வாயிலாக பயனடைகின்றனர். மற்ற மாநில முதலமைச்சர்களாலும் தவிர்க்க இயலாத காரணத்தால், விரைவில் இந்தியா முழுமைக்கும் இந்த திட்டம் செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அடுத்த கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் இத்திட்டம் வாயிலாக, அரசியல் வரலாற்றில் ஸ்டாலின் பெயரும் நிலைத்து இருக்கும். இதுவரை, திருச்சி மாநகராட்சியின் வார்டுகளில் உள்ள மக்களை சந்தித்து மனுக்கள் பெற்று வருகிறோம். அவற்றில் தகுதியான மனுக்கள் பிரித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து நகராட்சிப் பகுதிகளில் மக்களிடம் மனுக்கள் வாங்கப்பட உள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில், எம்பிக்களுக்கான நிதி 8 கோடி ரூபாயை, பிரதமர் நிறுத்தி வைத்து விட்டார். அதனால் கடந்த 2 ஆண்டுகளாக, பொது மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. தற்போது, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். திருச்சியில் இரண்டாவது விமான நிலையத்துக்கான புது கட்டடம் திறப்பதற்கு, 200 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்கள் நிலம் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தி விரிவாக்கப்பணிகள் நடக்கின்றன.

பஞ்சப்பூரில் தனி பஸ் ஸ்டாண்ட் பணிகளும் நடைபெற்று வருகிறது. திருச்சியில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 450 புராதன இடங்களை பராமரிப்பதற்கான தொல்லியல் துறைக்கு சென்னையில் அலுவலகம் இருந்தது.

அதை இரண்டாக பிரித்து, திருச்சி முதல் கன்னியாகுமரி வரையிலான கோயில் உள்ளிட்ட புராதன இடங்களை பராமரிக்க தென்னகத்துக்கான தனி அதிகாரி நியமித்து, திருச்சியில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சில பத்திரிகைகளில், மக்கள் என்னை மறித்ததாக செய்தி வெளியிட்டுள்ளனர். வெளியூர் பத்திரிகைகள் எழுதினால், அதில் அர்த்தம் இருக்கு. என்னை மறிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.

இதுவரை 45 ஆண்டு கால அரசியலில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து சுற்றுப்பயணம் செய்த போது, ஜெயலலிதாவாலேயே என்னை மறிக்க முடியவில்லை. வேறு யாரால் என்னை மறிக்க முடியும். சமீபத்தில் மக்களிடம் மனு வாங்கச் சென்ற போது, எஸ்டிபிஐ அமைப்பினர் 4 பேர் என்னை மறிக்கவில்லை. அவர்கள் பாவமாக சாலை ஓரமாக உட்கார்ந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு, ஏன் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது, அனுமதி பெற்று 40 ஆண்டுகளாக இருக்கும் குடோனை பூட்ட வேண்டும் என்றனர். தனியார் குடோனை நான் பூட்ட முடியுமா? மனு கொடுங்கள் பரிசீலிக்கிறேன் என்று கூறினேன். மேலும், உய்யக்கொண்டான் கால்வாய் பகுதியில், 1 கோடி ரூபாய் செலவாகும் பாலம் கட்ட வேண்டும் என்றனர்.

மொத்தமே 5 கோடி நிதி வருவதில், தொகுதிக்கு 80 லட்சம் தான் ஒதுக்க முடியும். அதில், எப்படி ஒரு கோடி செலவு செய்து பாலம் கட்ட முடியும். இந்த பாலத்துக்கே 1 கோடி செலவு செய்தால், தொகுதியில் மற்ற பணிகளுக்கு எப்படி நிதி கொடுக்க முடியும். அதனால், இதை அரசாங்கம் தான் செய்ய முடியும் என்றேன். அதை, மெதபைலில் வீடியோ எடுத்து, எஸ்டிபிஐ மறியல் போராட்டம் என்று எடுத்து டிவியில் போடுகின்றனர்.

பரவாயில்லை, பத்திரிகைகளில் எழுதுவதுதான் வருத்தமாக உள்ளது. அன்று மாலையே அந்த அமைப்பினர் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து சொல்கின்றனர். கடந்த 45 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். நான் பார்க்காத பதவி இல்லை. புதுசா வந்த கவுன்சிலரோ, எம்எல்ஏவோ இல்லை.

எழுதும் போது கொஞ்சம் பார்த்து எழுதுங்கள். மக்களை சந்திக்காவிட்டால், தொகுதியில் 6 முறை ஓட்டளிப்பார்களா?. எனக்கு மட்டுமல்ல, என் மகனுக்கும் வாக்களித்து, 35 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற வைத்துள்ளனர். குறை இருந்தால் சொல்லுங்கள். நாகரீகமாக பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மக்களை சந்திக்கும் ஆட்களை புண்படுத்தாதீர்கள்" எனத் திருநாவுகரசர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவி தொகை விரைவில் தொடக்கம்" - முதலமைச்சர் சித்தராமையா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.