ETV Bharat / state

அம்மா நகரும் நியாயவிலைக் கடை: அமைச்சர்கள் தொடங்கிவைப்பு

திருச்சி: அம்மா நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழாவில் நியாயவிலைக் கடை வாகனங்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
author img

By

Published : Oct 2, 2020, 1:18 AM IST

திருச்சியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு நடமாடும் நியாயவிலைக் கடை வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், "சாதாரண கடைநிலை தொண்டனும் அமைச்சராக முடியும் என்பது அதிமுகவில் நிதர்சனமான உண்மை. நானும் அமைச்சர் வளர்மதியுமே இதற்கு நல்ல உதாரணம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண்மை குடும்பத்தில் இருந்து வந்தவர். விவசாயியான அவர் தற்போது முதலமைச்சராக உயர்ந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள். அந்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அவருடைய சொந்தக் கருத்து. அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்' - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.