ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் - அமைச்சர் கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும், வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறுவது தோல்வி பயத்தில் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Minister KN Nehru said AIADMK will lose its deposit in the Erode by election
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
author img

By

Published : Feb 27, 2023, 5:54 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் டாக்டர் ரோடு பகுதியில் 10-வது வார்டு வள்ளுவர் தெரு, செல்வ முத்து, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பின்னர் பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் 19 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார். காலை முதலே வாக்காளர்கள் அதிகமாக கை சின்னத்துக்கு வாக்களிப்பதைக் காண முடிகிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிக்கப்படுவதாக அதிமுகவினர் புகார் கூறி வருவது தோல்வி பயத்தில் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு தொடங்க உள்ளதால், உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம். திருச்சி காவிரி பாலம் மூன்று நாட்களில் திறக்கப்படும். கோடையில் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் முக்கியப் பகுதியில் குடிநீர் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளன' என்றார்.

இதையும் படிங்க: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் திருமாவளவன் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.