ETV Bharat / state

ஒவ்வொரு கிராமத்திலும் பேருந்தை நிறுத்தினால் கட்ட வண்டின்னு பயணிகள் சொல்ல மாட்டாங்களா?- அமைச்சர் கே.என் நேரு நகைச்சுவை

author img

By

Published : May 2, 2022, 7:55 AM IST

தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்தை ஒவ்வொரு கிராமத்திலும் நிறுத்த சொன்னால், கட்ட வண்டின்னு பயணிகள் சொல்ல மாட்டாங்களா என அமைச்சர் கே.என் நேரு நகைச்சுவையாக பதிலளித்தார்.

கிராமசபைக் கூட்டத்தில் தீயாய் வந்த குறைகளுக்கு, தேனாய் பதில் அளித்த - அமைச்சர் கே.என் நேரு minister-kn-nehru-respond-well-to-grievances-raised-by-kannudayanpatti-people-at-village-council-meeting

திருச்சி: மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நேற்று (மே.1) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொது மக்கள் தங்களின் கோரிக்கை குறித்த கேள்விகளைக் கேட்குமாறு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பழுதான சாலையைச் சீரமைத்தல், குடிநீர் வசதி, பள்ளி குழந்தைகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதி, நெல் கொள்முதல் நிலையம் என அடுத்தடுத்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு ஒவ்வொரு மக்களின் கேள்விகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து, மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து பரீசிலித்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் கே.என் நேரு
அமைச்சர் கே.என் நேரு

மேலும் பேருந்துகள் அனைத்தும் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு நகைச்சுவையாகப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு பழனியில் இருந்து செல்லும் பேருந்தை எப்படியா நிறுத்த முடியும், நான் அந்த துறையின் அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்தேன். அப்படி பழனி செல்லும் பேருந்தை நிறுத்த சொன்னால் பேருந்தில் இருக்கும் பயணிகள் இப்படி எல்லா இடத்திலும் நின்று போகுது. கட்ட வண்டியா? என்று கேட்பார்கள் என நகைச்சுவையாகக் கூறி கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

அதேபோல் கிராம சபைக்கூட்டத்தில் கே.உடையாபட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூற, அதைக் கேட்ட அமைச்சர் ஓரிரு தினங்களில் கண்டிப்பாக வழங்கப்படும் என்று கூறினார். இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் ஆ.சிவராசு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்படும்' - முதலமைச்சர் ஸ்டாலின்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.