திருச்சி : திருச்சி மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழாவின் போது, தங்க நாணயங்கள், பல லட்ச ரூபாய் நோட்டுகளால் உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது பகவதி அம்மன் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இத்தலத்தில் பெருந்திருவிழா (31.12.21) டிச.31ஆம் தேதி தொடங்கியது.
முக்கிய திருவிழாவான 'தனலெ்ட்சுமி அலங்காரம் 'வெகு விமர்சையாக நடைபெற்றது. 10, 20, 50, 100, 200 , 500, 2000 ரூபாய் நோட்டுகளால் உற்சவரை சுற்றி தோரணம் அமைக்கப்பட்டது.
மேலும் தங்க நாணயங்களால் உற்சவருக்கு அலங்காரம் செய்து பக்தர்களை பிரமிக்க வைத்தனர். பல லட்ச ரூபாய் நோட்டுகளினால் பகவதி அம்மன் நேர்த்தியோடு அழகாக அமைக்கப்பட்டு 'தனலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இதைத் தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்தத் தனலட்சுமி அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவானது கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி நடைபெற்றது.
இதையும் படிங்க : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் 148 திருமணங்கள் ரத்து!