ETV Bharat / state

மணப்பாறை மாட்டு சந்தையில் குதிரை விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி - horse sale

மணப்பாறை மாட்டு சந்தையில் குதிரைகளும் விற்பனைக்கு வந்துள்ளது வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குதிரைகள் விற்பனை
குதிரைகள் விற்பனை
author img

By

Published : Aug 4, 2021, 9:39 AM IST

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சந்தைகளில் மணப்பாறை மாட்டு சந்தை மிகவும் புகழ் பெற்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை நண்பகல் முதல் புதன்கிழமை மதியம் வரை மாட்டுச்சந்தை நடைபெறும்.

இங்கு காங்கேயம் பசு, காளை, நாட்டு மாடு, வண்டி மாடு என பல்வேறு வகையான இன மாடுகளை வாங்கவும், விற்கவும் மாநிலம் முழுவதும் உள்ள வியாபாரிகள், விவசாயிகள் வருவது வழக்கம். அது மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்வர்.

குதிரை விற்பனை

வழக்கம் போல நேற்று நண்பகல் (ஆகஸ்ட்3) தொடங்கிய மாட்டு சந்தையில், நாட்டு குதிரைகளும் விற்பனைக்கு நிறுத்தபட்டிருந்தன. இது வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மணப்பாறை மாட்டு சந்தையில் குதிரைகள் விற்பனை

இது குறித்து குதிரை வியாபாரிகள்,’’பெரும்பாலும் குதிரை விற்பனைக்கு என அதிகச் சந்தைகள் கிடையாது. கரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில சந்தைகளில் குதிரைகளை வாங்க வியாபாரிகள் வருவதில்லை.

மணப்பாறை மாட்டு சந்தையில் குதிரை விற்பனை

கோரிக்கை

புகழ்பெற்ற இதுபோன்ற மாட்டு சந்தைகளுக்கு அதிகளவு வியாபாரிகள் வருவார்கள் என்பதால் விற்பனைக்கு கொண்டுவந்தோம்’என்றனர். வரும் காலங்களில் மணப்பாறை மாட்டு சந்தையில் குதிரை விற்பனைக்கும் தனி இடத்தை ஒதுக்கி ஊக்குவிக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குதிரை சவாரியால் மில்லியனில் புரளும் ராஜஸ்தான் குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.