ETV Bharat / state

சனாதன விவகாரம்: உதயநிதி மற்றும் வைரமுத்துவை கடுமையாக சாடிய ஹெ.ச் ராஜா! - உதயநிதி ஸ்டாலின்

H.Raja speech about sanatan Dharma: சனாதனம் பற்றி பேசிய உதயநிதியை கைது செய்யாமல், தமிழ்நாடு காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 4:55 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா

திருச்சி: சனாதனம் பற்றி விமர்சித்து பேசிய அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, “உண்மைகளை பொய் என்றும் பொய்யை உண்மைகள் என்று பேசுபவர்கள் திமுகவினர். ஆண்டாள் நாச்சியாரை அவதூறு பரப்பிய வைரமுத்துவை கைது செய்யாமல், சனாதனம் பற்றி பேசும் உதயநிதியை கைது செய்யாமல், தமிழ்நாடு காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் திராவிட இயக்கங்களே இல்லாமல் அழித்து, பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்.

பகவத் கீதையில், குணத்தின் அடிப்படையில் வர்ணங்களை உருவாக்கி இருப்பதாக கிருஷ்ணபரமாத்மா குறிப்பிடுகிறார். அதே போல, திருவள்ளுவரும் அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் என்ற நான்கு வர்ணங்களை குறிப்பிட்டு இருக்கிறார். பகவத் கீதையில் சொன்னதை பேசிய வள்ளுவர் சனாதனி. கால்டுவெல் வந்த பின், மதமாற்றத்துக்காக பல பொய்யான விஷயங்களை கடைபிடித்தனர், என்று அமெரிக்க அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழர்களை 180 ஆண்டுகளாக திருப்பிப் திருப்பி பொய்யை சொல்லி அவனை முட்டாளாக்கி வைத்துள்ளனர். அதை மாற்றும் வரை பாஜக ஓயப்போவதில்லை.

சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதி குடும்பத்தை சும்மா விடமாட்டேன், என்று ஒருவர் கூட சொல்ல வரவில்லை. சனாதனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அதை அளவிட வேண்டிய அவசியம் இல்லை. செம்படவப் பெண்ணுக்கு மகனாக பிறந்த வேதவியாசர் வேதம் எழுதினார். சத்திரியர் குலத்தில் பிறந்த விசுவாமித்திரர் பிரம்ம ரிஷியாக மாற முடிந்தது. திருமாவளவனும், சுபவீர பாண்டியனும் பிறந்த பிறகு தான் ஏற்றத் தாழ்வுகள் வந்தன.

புராண காலங்களில் வர்ணம் விட்டு வர்ணம் மாறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. கல்கி கிருஷ்ண மூர்த்தியை எம்.எஸ்.சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டது உதாரணம். இனப்படுகொலை செய்வதாக சொன்னவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்துக்கள் அனைவரும் விலை மாதர் என்று சொன்ன கேடு கெட்டவர்களோடு விவாதம் செய்யத் தயாராக இல்லை” என்றார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் எ.வ.வேலு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.