திருச்சி மாவட்ட அமெச்சூர் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தங்களின் உடலை வளைத்து ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்துகாட்டி அசத்தினர்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர் பிரபு, வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கினர்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பிறகு, ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன் நிர்வாகிகள் தேர்வு..!