திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும்; அதனை சொந்தத்துறை அதிகாரிகள் பெருமிதம் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 10,60,073 மதிப்பிலான 199 கிராம் மதிப்புள்ள 2 தங்க பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமானத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மாமூல் கேட்ட காவலர்: வீடியோ எடுத்து ஓடவிட்ட வாகனஓட்டி