ETV Bharat / state

கரோனா அறிகுறியுடன் சிங்கப்பூரிலிருந்து வந்த பெண் பயணி

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கரோனா அறிகுறியுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Female traveler from Singapore with corona symptom

author img

By

Published : Feb 8, 2021, 7:52 AM IST

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் இந்த விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

விமானங்களில் பயணம்செய்வதற்கு எந்த நாட்டிலிருந்து பயணம்செய்ய இருக்கிறார்களோ, அந்த நாட்டு அரசின் சார்பில், 'பயணம்செய்பவருக்கு கரோனா தொற்று அறிகுறி இல்லை' எனச் சான்றிதழ் பெற்ற பின்பே விமானத்தில் பயணம்செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (பிப். 7) சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம்செய்தனர். 'கரோனா தொற்று அறிகுறி உள்ளது' எனச் சான்றிதழுடன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் பயணம்செய்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமானத்தில் அனுமதி அளித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விமான நிலைய அலுவலர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், நோய்த்தடுப்பு அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அலுவலர்கள் பயணியைச் சோதனைசெய்து, அவரை உடனடியாக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மத்திய அரசின் விதிகளை மீறி கரோனா அறிகுறி உள்ள பயணியை அழைத்துவருவது திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறை எனத் தெரியவருகிறது.

இதையும் படிங்க: முக ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது - இன்பதுரை எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.