ETV Bharat / state

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு: மானியத்தில் ட்ரோன் வழங்க விவசாயிகள் கோரிக்கை! - trichy news

திருச்சியில் முதல்முறையாக ட்ரோன்களை வைத்து பூச்சி மருந்து தெளிக்கும் பணியை விவசாயிகள் செய்துவருகின்றனர். இதில் அதிகளவு செலவாவதால் தமிழ்நாடு அரசு மானியத்தில் ட்ரோன்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

drone
ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
author img

By

Published : May 1, 2023, 3:21 PM IST

ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு: மானியத்தில் ட்ரோன் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

திருச்சி: இந்திய நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயமும், விவசாயத் தொழிலும் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்கும் ஆட்கள் தட்டுப்பாடு தான். விவசாயத்தைப் பொருத்தவரை நிலத்தை சீர் செய்தல் விதைப்பு, நடவுகளைப் பறித்தல், மருந்து மற்றும் இடுபொருட்கள் தெளித்தல், அறுவடை போன்ற பணிகள் ஆட்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தற்போது அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, வேளாண்மைப் பணிகளுக்கும் நவீன உபகரணங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. அதனால், குறைந்த விலையிலான உபகரணங்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தினாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அறுவடை இயந்திரம், கதிரடிக்கும் இயந்திரம் போன்ற விவசாய கருவிகளை தனிப்பட்ட முறையில் விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

அதனால், அரசு சார்பில் வேளாண்மைத் துறை வாயிலாக, வேளாண் பணிகளுக்கான இயந்திரம் மற்றும் கருவிகளை வாடகைக்கு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும், விதைப்பு மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகள், ‘ட்ரோன்’ வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி மாவட்டம், புரத்தாக்குடியைச் சேர்ந்த வேளாண்மைப் பட்டதாரி சண்முகநாதன். இவர் வாடகை அடிப்படையில், ‘ட்ரோன்’ வாயிலாக, மிக உயர்ந்த மா மரங்களுக்கும், பல ஏக்கர் பரப்பிலான வயல்களுக்கும் மருந்து தெளிக்கும் தொழில் செய்து வருகிறார்.

வாடகை கொடுத்து ட்ரோன் வாயிலாக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி புங்கனூரைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் கூறியதாவது, “பத்து ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளேன். கடந்த ஒரு வாரமாக நெற் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்காக, ஆட்களைத் தேடியும் கிடைக்கவில்லை. மொத்தமாக, ஒரே நாளில் பத்து பேர் கிடைத்தால் தான், முழுமையாக மருந்து தெளிக்க முடியும்.

ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக, ட்ரோன் வாயிலாக மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளேன். இதை பயன்படுத்துவதால் மருந்து செலவு குறைகிறது. ஆனால், ஏக்கருக்கு 650 ரூபாய் வாடகை கொடுத்துள்ளேன். வாடகை அதிகம் இருப்பதால், எல்லோராலும் இதைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

எனவே, விவசாயிகளுக்கு மானியத்தில் மருந்து தெளிக்க, அரசு மற்ற வேளாண் கருவிகளை வாடகைக்கு விடுவது போல், ட்ரோன்களை வாங்கி வாடகைக்கு வழங்க வேண்டும். அதே சமயம் ரூ.5 லட்சத்திற்கு மேல் விலை கொடுத்து ட்ரோன் மற்றும் பேட்டரிகள் வாங்குவது சாமானிய விவசாயிகளால் முடியாத காரியம். அதனால், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மண்ட மேல இருக்க கொண்டையை மறந்திட்டீங்க மேடம்.. லேப்டாப் திருடி மாட்டிக்கொண்ட பெண் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.