ETV Bharat / state

விவசாயிகள் பிணம் போல் வேடமிட்டு போராட்டம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக விவசாயிகள் பிணம் போல் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Jan 7, 2020, 11:00 PM IST

Farmers
Farmers

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நகை ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும், வெங்காயத்தை அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் விற்க வேண்டும், மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டத்தையும் காவிரி - குண்டாறு -வைகை இணைப்பு திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஜங்சன் அருகே இப்போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 8ஆம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் போராட்டம்

மூன்றாவது நாள் விவசாயிகள் கோவணம் அணிந்து, பட்டை நாமம் போட்டு, ரத்தக் கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4ஆவது நாள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 5வது நாளான நேற்று விவசாயிகள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறாவது நாளான இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை எடுத்துக் கூறும் வகையில் பிணம் போல் வேடமிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம்

Intro:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக விவசாயிகள் பிணம் போல் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜ்ஜ்ஜ்Body:திருச்சி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக விவசாயிகள் பிணம் போல் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும். வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க வேண்டும். தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட வேண்டும்.
10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது லாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடங்கியது.
திருச்சி ஜங்சன் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 3வது நாள் விவசாயிகள் கோவணம் அணிந்து, பட்டை நாமம் போட்டு, ரத்தக் கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4வது நான் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து 5வது நாளான நேற்று விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது ஆறாவது நாளான இன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை எடுத்துக் கூறும் வகையில் பிணம் போல் வேடமிட்டு போராட்டம் நடத்தினர்.

பேட்டி: அய்யாக்கண்ணு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.