மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதன் விவரங்கள்,
குண்டூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் குண்டூர் மாரியப்பன் தலைமையில் ரத்ததான முகாம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் இளைஞரணி சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். அதன்பின் 500 ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன் மற்றும் மாவட்ட பொருளாளர் பண்ணப்பட்டி கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு சண்முகம், இளைஞரணி செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரெங்க நகர்: திருச்சி கேகே நகர் அருகே உள்ள சுந்தர் நகர், ரெங்க நகரில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் மற்றும் கவி செல்வா என்கிற செல்வராணி ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் 300 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், உணவு உள்ளிட்டவை இன்று விநியோகம் செய்யப்பட்டன. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் அன்பழகன், கிராப்பட்டி செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உறையூர்: இதேபோல் திருச்சி உறையூர் பாண்டமங்கலம், உறையூர் கீரைக்கொல்லை தெரு, முத்தரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
அந்தநல்லூர்: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட முத்தரசநல்லூர், பெட்டவாய்த்தலை, அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் மகன் கே.என். அருண் நேரு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்னூர்: திருச்சி மாநகரம் 51ஆவது வட்டம் சார்பில் தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை கே.என். நேரு தொடங்கி வைத்தார். இதில் வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.