திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று (அக்.4) கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்பு, முத்தரசனின் உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின், முத்தரசனுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவு வந்த பிறகு 2 நாட்கள் மருத்துவமனை கண்காணிப்பில் முத்தரசன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில், முத்தரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் முத்தரசனை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சசிகலாவின் எஸ்டேட் அலுவலக கண்ணாடிகளை உடைத்தது யானைகளா? வெளியான அதிர்ச்சி வீடியோ!