ETV Bharat / state

ஏழை, எளியவர்கள் என்றால் கண்டிப்பு; மற்றவர்களுக்கு ஃப்ரீ - காவல்துறை மீது குற்றச்சாட்டு

திருச்சி: மணப்பாறை அருகே 144 தடையை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஏழை எளிய மக்கள் மீதே காவல்துறை கண்டிப்புடன் நடந்துகொள்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தடை உத்தரவை காரணம் காட்டி ஏழை,எளிய மக்கள் மீது கண்டிப்பு காட்டும் காவல்துறை - பொதுமக்கள் வேதனை

author img

By

Published : Apr 16, 2020, 4:03 PM IST

Updated : Apr 16, 2020, 4:47 PM IST

கரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமாகியுள்ளதால் ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில் அதை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) காலை முதல் வாகன போக்குவரத்து வெகு இயல்பாக காணப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் முகக் கவசங்கள் அணியாமலும், முறையான அனுமதி பெறாமலும் சாலையில் அச்சமின்றி சுற்றித்திரிந்தனர். கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தி வந்த காவல்துறையினர் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிய இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்று காரணமின்றி சாலையில் சுற்றித்திரிபவர்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது மணப்பாறை பகுதியில் வாடிக்கையாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அருண் பிரகாஷ் என்பவர் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,

144 தடை உத்தரவை காவல்துறையினர் பாமர மற்றும் ஏழை மக்களிடம் மட்டுமே கடுமையாக செயல்படுத்தி வருவதாகவும், அரசியல் பிரமுகர்களிடம் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு அவர்களை கண்டிக்காமல் விட்டு விடுவதாகவும் கூறினார். மேலும் நேற்று தனது அம்மாவிற்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டதால் அவசரமாக மருந்து வாங்க சென்றபோது மருந்துச் சீட்டு எங்கே, மருந்துச்சீட்டு இல்லை என்றால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பு என்ற பெயரில் இரண்டு பெண் காவலர்கள் தாறுமாறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

தடை உத்தரவை காரணம் காட்டி ஏழை,எளிய மக்கள் மீது கண்டிப்பு காட்டும் காவல்துறை - பொதுமக்கள் வேதனை

தொர்ந்து பேசிய அவர், இன்று 144 தடை உத்தரவை மதிக்காமல் தடை உத்தரவை மீறி வாகனங்களில் முகக் கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படுவது வேதனை அளிப்பதாகவும் ஏழை எளிய பாமர மக்களிடம் மட்டுமே கண்டிப்பு காட்டும் காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பால் உணவின்றித் தவித்த மாற்றுத்திறனாளி: உதவிய காவல் ஆய்வாள
ர்

Last Updated : Apr 16, 2020, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.