இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் இன்று (ஜன. 05) 59 ஆயிரத்து 980 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 820 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஏழாயிரத்து 808 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 971 பேர் பூரண குணமடைந்து இன்று (ஜன. 05) வீடு திரும்பினர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து இரண்டாயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 4 நோயாளிகளும் என 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கரேனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.
- மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,26,700
- கோயம்புத்தூர்- 52,732
- செங்கல்பட்டு- 50,319
- திருவள்ளூர்- 42,849
- சேலம் -31,771
- காஞ்சிபுரம் -28,837
- கடலூர் - 24,745
- மதுரை - 20,627
- வேலூர் -20,309
- திருவண்ணாமலை -19,203
- தேனி -16,937
- தஞ்சாவூர் - 17,287
- திருப்பூர் -17,237
- விருதுநகர் - 16,408
- கன்னியாகுமரி - 16,453
- தூத்துக்குடி -16,122
- ராணிப்பேட்டை -15,954
- திருநெல்வேலி-15,344
- விழுப்புரம் -15,055
- திருச்சிராப்பள்ளி -14,290
- ஈரோடு -13,851
- புதுக்கோட்டை- 11,436
- கள்ளக்குறிச்சி - 10,820
- திருவாரூர் -10,982
- நாமக்கல் - 11,295
- திண்டுக்கல் -11,012
- தென்காசி - 8,298
- நாகப்பட்டினம் - 8,220
- நீலகிரி- 8,002
- கிருஷ்ணகிரி - 7,913
- திருப்பத்தூர்- 7,482
- சிவகங்கை - 6,557
- ராமநாதபுரம் -6,341
- தர்மபுரி- 6463
- கரூர் - 5235
- அரியலூர் - 4642
- பெரம்பலூர் - 2258
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 930
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1,026
- ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.