ETV Bharat / state

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்... சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அய்யாக்கண்ணு கோரிக்கை - TN Govt to bring resolution on protected agricultural zone

திருச்சி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அய்யாக்கண்ணு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
அய்யாக்கண்ணு, ayyakannu
author img

By

Published : Feb 11, 2020, 5:10 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாடு அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பை நிறைவேற்றவில்லை.

அதேபோல் தற்போது டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் இந்த அறிவிப்பை நீட்தேர்வு அறிவிப்புபோல் விட்டுவிடாமல் சட்டப்பேரவையில் இதனை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு

விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய்வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி சென்று அமித்ஷா வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதேபோல விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இதையும் படிங்க: புதுவித அரசியலில் ஈடுபட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை

Intro:பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.Body:திருச்சி:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின்  மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பின அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பை நிறைவேற்றவில்லை. அதே போல டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக  அறிவிக்கப்படும் என்கிற அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் நீட்தேர்வு போல் இதை விட்டுவிடாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தீர்மானம் நிறைவேற்றாமல் விட்டு விட கூடாது.
விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி சென்று அமித்ஷா வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதே போல விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றார்.

பேட்டி: அய்யாக்கண்ணு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.