திருச்சி மாவட்டம் மணப்பாறை வலசப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் செல்வம். இவரது மகன் சரவணகுமார். தடகள விளையாட்டு வீரர். வரும் ஏப்ரல் 27,28ஆம் தேதி நேபாளம் நாட்டில் சர்வதேச தடகள விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள சரவணகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைபோன்று மணப்பாறை தொட்டிபூப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி, துணி வியாபாரி. இவரது மகன் அருண். கபடி வீரர். இவரும் ஏப்ரல் 27,28ஆம் தேதி நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கபடி விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளார். ஏழ்மை காரணமாக இருவராலும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய பயண செலவுக்கான உதவித்தொகை வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 25ஆம் தேதி கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, சர்வேதேச போட்டியில் கலந்துகொள்ள தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின்போது சமூக செயற்பாட்டாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ், மணிவேல், பிரவின் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு விதிமுறைகள்: வணிகர்களிடம் காவல் துறையினர் எடுத்துரைப்பு