திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கத்தார் நாட்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், இன்று தனது 100ஆவது நிறைவு செய்த நிலையில் அவர் நமது செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ”நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். இதுவரை அதிக மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன்.
இதுவரை அரசு எந்த உதவியும் எனக்கு செய்யவில்லை. அரசு எனக்கு உதவினால் நான் கண்டிப்பாக ஜப்பானில் நடக்கும் போட்டியில் தங்கம் பெறுவேன்” என்றார்.