ETV Bharat / state

திருச்சி - டெல்லி இடையே விமானப் போக்குவரத்து எப்போது? - Air Transport Between Trichy to Chennai

திருச்சியிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சியாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

air-transport-between-trichy-to-chennai-going-to-start-from-march-28th
Air Transport Between Trichy to Chennai going to Start from March 28th
author img

By

Published : Feb 13, 2020, 5:39 PM IST

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சியாம் சுந்தர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், '' ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடந்த ஆண்டைவிட 40 விழுக்காடு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 3 ஆயிரத்து 124.34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின்போது இதே காலக்கட்டத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயில் 75 விழுக்காடாகும். அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் நிகர வருவாய் 26 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 679.8 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 177.3 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வருவாய் ரீதியிலான செயல்பாடு சிறந்த முறையில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் வருமானம் 4,235 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் வருவாய் அளவு 5,000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன வரலாற்றிலேயே இத்தகைய வருவாய் ஈட்டப்போவது இதுதான் முதல் முறை. 2018- 19ஆம் நிதியாண்டில் 4,171.5 கோடி ரூபாய் மொத்த வருவாயாகும். இதில் லாபம் மட்டும் 168.5 கோடியாக உள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிஈஓ சியாம் சுந்தர் செய்தியாளர் சந்திப்பு

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திருச்சி வழித்தடம் சிறப்பாக இயங்கிவருகிறது. இந்த வகையில் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் மூன்று புதிய வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படவுள்ளன. திருச்சியிலிருந்து அபுதாபிக்கும், திருச்சியிலிருந்து தோகாவுக்கும் நேரடி விமான சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படவுள்ளன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உள்ளூர் விமான சேவைகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை என்பதால், திருச்சியிலிருந்து தலைநகர் டெல்லிக்கு தினசரி நேரடி விமான சேவை இல்லை. இந்தக் குறையை போக்கும் வகையில் திருச்சியிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

மதுரையிலிருந்து டெல்லிக்கு தினமும் இயக்கப்படும் 4 விமானங்களில் ஒரு விமானம் திருச்சி- மதுரை- டெல்லி என்ற வழித்தடத்தில் வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் இயக்கப்படும். திருச்சியிலிருந்து வாரத்திற்கு 35 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய விமானங்களின் சேவை தொடர்ந்து நடைபெறும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் நான்கரை மணி நேரம் பயணம் செய்யக்கூடிய இடங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கக்கூடிய திறன் உள்ளது. கூடுதல் விமானங்கள் கிடைக்கப்பெற்றால் கூடுதல் வழித்தடங்களில் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். எங்களிடம் தற்போது 25 விமானங்கள் உள்ளன. இதில் 8 விமானங்கள் 189 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்டதாகும். ஏற்கனவே நாடு முழுவதும் 651 விமான சேவை அளிக்கப்படுகிறது. இந்த புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்வதன் மூலம் இதன் எண்ணிக்கை 665 ஆக உயரும்'' என்றார்.

இதையும் படிங்க: 'விமானம் தாமதமானால் இனி கவலையே வேண்டாம்: விரைவில் வருகிறது தியேட்டர்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.