திருச்சி மாவட்டம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சளி, காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வட்டாட்சியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் பணியாற்றிய அலுவலகம் மூடப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியருக்கு கரோனா உறுதியானதால் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எப்படி அடக்கம் செய்யப்படுகின்றன?