ETV Bharat / state

விடிய விடிய நடந்த மீன்பிடி திருவிழா... மூட்டை மூட்டையாக மீன்களை அள்ளிய மக்கள்! - Manapparai

மணப்பாறை அருகே நள்ளிரவில் அரங்கேறிய மீன் பிடி திருவிழா. அங்கு வந்த அனைவரும் அள்ள அள்ள குறையாத குளம், வாரி வாரி கொடுத்த குளம் என புகழ்பாடி சென்றனர்.

fishing festival
மீன்பிடி திருவிழா
author img

By

Published : Jun 30, 2023, 3:47 PM IST

மணப்பாறை அருகே நள்ளிரவில் அரங்கேறிய மீன் பிடி திருவிழா

திருச்சி: மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பின்னத்தூர் பெரியகுளம். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளம் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மணப்பாறை பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் மிக முக்கியமான ஏழு குளங்களில் இதுவும் ஒன்று. இந்த குளத்தின் நீராதாரத்தை நம்பி 15க்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய தொழில் செய்து பயனடைந்து வருகின்றனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மழை பொய்த்து போனதால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றத்துடன் விவசாய தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் பெய்த கன மழையால் நிரம்பி வழிந்த நீர் நிலைகளில் இதுவும் ஒன்று.

இதனால் பல வருடங்களுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் தங்கள் விவசாய தொழிலை முன்னெடுத்து மிகவும் ஆர்வத்துடன் செய்யத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக நெல், கரும்பு உள்ளிட்டவைகளை அதிக அளவில் பயிரிட்டு பயனடைந்தனர். இந்நிலையில் தற்போது கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்த நிலையில், குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்ற தொடங்கியது.

இதனால் மழைக்காலங்களில் அந்த குளத்திற்கு நீர்வரத்து மூலம் மற்ற குளங்களில் இருந்து வந்த மீன்கள் இனப்பெருக்கத்திற்கு பின் பல மடங்காக பெருகியிருந்தது. தற்போது குளத்தில் இடுப்பளவு தண்ணீர் கிடந்த நிலையில், மீன்கள் தண்ணீருக்கு மேல் துள்ளி குதித்து விளையாட தொடங்கின.

இதனால் அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் நாளை (சனிக்கிழமை) மீன்பிடி திருவிழா நடத்தி அதன் மூலம் பொதுமக்கள் மீன்களைப் பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில் திடீரென குளத்திற்குச் சென்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வலைகளை போட்டு மீன்களை அரிக்க தொடங்கினர்.

அதில் சுமார் 25 கிலோ எடை கொண்ட மீசை கெளிறு, விரால் உள்ளிட்ட பல வகை மீன்களும் 5 முதல் 6 கிலோ எடை கொண்ட கட்லா, கெண்டை வகை மீன்களும் வலையில் சிக்கின. நள்ளிரவு நேரம் என்பதால் குளத்திற்குள் இருந்த டார்ச் லைட்டுகளின் வெளிச்சம் திருவிழா நடப்பது போல் விழாக்கோலம் பூண்டிருந்தது. குளத்தைச் சுற்றி சுமார் 600-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.

குளத்தில் இளைஞர்கள் வலைகளை போட்டு அரித்து கரைக்கு எடுத்து வர அந்த மீன்களை சாக்கு பையில் போட்டு பாதுகாக்கும் பணியில் பெண்களும், சிறுவர்களும் ஈடுபட்டிருந்தனர். பிடித்த மீன்களை கட்டுச்சாக்காக கட்டி இருசக்கர வாகனத்தில் மூட்டை மூட்டையாக அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை மீன் பிடித்தலில் கலந்து கொள்ளலாம் என்று இருந்த சுற்று வட்டார கிராம மக்கள் தகவல் அறிந்து விடியற்காலையில் குளத்திற்கு வந்து தங்கள் பங்கிற்கு தாங்களும் வலைகளை போட்டு அரிக்கத் தொடங்கினர்.

நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மீன்பிடி திருவிழா இன்று காலை 9 மணி வரை நடைபெற்றது. இதில் பெரும் மீன்களைப் பிடித்தவர்கள் சிறிய மீன்களை கரையிலேயே போட்டுவிட்டு சென்றனர். அந்தக் கரையில் கிடந்த மீன்களையும் எடுத்து கட்டு சாக்க தூக்கி சென்றவர்கள் நூற்றுக்கணக்கானோர்.

இப்படி வெகு விமரிசையாக நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் பங்கேற்றவர்கள் அந்த குளத்தை அள்ள அள்ள குறையாத குளம் என்றும், வந்தவர்களுக்கெல்லாம் வாரி கொடுத்த குளம் என்றும், வாழ்க்கையிலே மறக்க முடியாத மீன்பிடித் திருவிழா இதுதான் என்றும் குளத்தை புகழ் பாடிச் சென்றனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்: கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.