இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி ஐஏஎஸ் நியமனம்.
2.நில சீர்த்திருத்தத் துறை இயக்குநராக லில்லி ஐஏஎஸ் நியமனம்.
3. சட்டம் - ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் ஐஏஎஸ் நியமனம்.
4. நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் ஐஏஎஸ் நியமனம்.
5. பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் ஐஏஎஸ் நியமனம்.
6. வணிகவரித் துறை (அமலாக்கம்) இணை ஆணையராக மணீஷ் சங்கர்ராவ் ஐஏஎஸ் நியமனம்.
7. வணிகவரித் துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராக லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம்.
8. சர்க்கரை மேலாண்மை ஆணையராக ஆனந்தகுமார் ஐஏஎஸ் நியமனம்.(இவர் தமிழ் நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குனராகவும் செயல்படுவார்)
9.தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ஷோபானா ஐஏஎஸ் நியமனம்.
10. கூட்டுறவுத் துறை (கோ- ஆப்டெக்ஸ்) மேலாண் இயக்குநராக மைதிலி கே.ராஜேந்திரன் ஐஏஎஸ் நியமனம்.
11. மாநில தொழில் வளர்ச்சிக் கழக (சிப்காட்) நிர்வாக இயக்குநராக அனீஷ் சேகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.