இவர் கணக்கியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், தமிழ், ஆங்கிலம், வணிக கணிதம் ஆகியப் பாடங்களில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதே பள்ளியில் பயிலும் மாணவன் தர்ஷன் 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். கணக்கியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தமிழ், வணிக கணிதம் 99 ஆங்கிலம் 98 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மொத்தம் 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாணவன் தேர்ச்சி அடைந்துள்ளார். முதல் மதிப்பெண் 2 மதிப்பெண் எடுத்த இருவரையும் பள்ளியின் தாளாளர் பாராட்டியுள்ளார்.
தேர்ச்சி அடைந்த மாணவர்கள் கூறுகையில், "தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம். நேரத்தை வீணடிக்காமல் தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
அதிக மதிப்பெண்கள் எடுக்க எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எங்களுடைய வகுப்பு ஆசிரியர், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களும் எங்களுக்கு மிகுந்த ஒற்றுமையாய் செயல் பட்டார்கள்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி விஷமருந்தி தற்கொலை: காதலனை தேடும் காவல்துறை