பெரம்பலூர்: செட்டிகுளம் அருகே அரிய வகை நட்சத்திர ஆமை பிடிபட்டது.
நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் கோயில் அருகே மலைப் பகுதியை ஒட்டி தேவராஜ் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இன்று (ஜுலை 2) காலை தேவராஜ் மகன் ராஜசேகர், வயலில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயத்திற்குத் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது, வாய்க்காலில் அரிய வகை நட்சத்திர ஆமை வந்ததைக் கண்டுள்ளார்.
அதனைப் பாதுகாப்பாக பிடித்த அவர், கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் வனக்காவலர் சசிக்குமாருடன் ராஜசேகரைச் சந்தித்த வனக்காப்பாளர் அன்பரசு, பிடிபட்ட அரிய வகை நட்சத்திர ஆமையை பெற்றுச் சென்றார்.