'வெடிகளைக் குறைப்போம் - செடிகளை நடுவோம்' என்ற முழக்கத்தின் அடிப்படையில் இந்த மரம் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவெறும்பூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கருணாகரன் மரங்களை நட்டு நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகர் நீலமேகம், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சந்திரசேகர், மக்கள் சக்தி இயக்க திருவெறும்பூர் பகுதிச் செயலாளர் பெரியசாமி, திராவிடமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் இயக்க நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் விலையில்லா நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.