கந்த சஷ்டி விழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள் விடுத்துவருகின்றனர்.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு வந்த இணை ஆணையரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர்.
அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி விழா பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.
இந்த விழாவின் ஆறாம் நாள் நிகழ்வாக சூரசம்ஹார நிகழ்ச்சியும், பத்தாம் நாள் நிகழ்வாக மருங்கூரிலிருந்து சுப்ரமணிய சாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் ஆராட்டுக்காக மயிலாடி நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் உள்ள தீர்த்தவாரி மடத்தில் எழுந்தருளுவார். பின்னர் தீர்த்தவாரி மடத்தில் வைத்து நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு காட்சி தரும் சுப்பிரமணியசாமி சிறிது நேரத்தில் மீண்டும் மருங்கூர் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்வார் இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெற சிக்கல் தெரிகிறது.
எனவே ஆராட்டு நிகழ்ச்சியை பாரம்பரிய முறை மாறாமல் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசின் கரோனா தடுப்பு விதிகளுக்குள்பட்டு மயிலாடியில் வைத்து நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும்" என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.