திருப்பூர் மாவட்டம், மங்கலம் அடுத்துள்ள இந்தியன் நகர்ப் பகுதியில் பத்திற்கும் மேற்பட்டோர் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் திடீரென கத்தியை எடுத்து, இன்னொரு நபரைக் குத்தி விட்டு, தப்பி ஓடி விடுகிறார்.
பார்ப்பது படத்தில் நடப்பது போல் இருந்தாலும், பக்கத்தில் இருப்பவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது, இந்நிகழ்வு. தற்போது, இந்தக் காட்சியானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்தச் சண்டை என்ற குழப்பங்களும் நிலவி வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்பட்ட காரணத்தால், இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல் துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மங்கலம் காவல் துறையினர், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது குறித்தும், என்ன காரணத்திற்காக இந்தச் சம்பவம் நடந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் களேபரம் போல் காட்சியளித்தன.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் கைது