திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவர் வடக்கு பூண்டி ரிங் ரோடு புது பாலம் அருகே இரவு டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை யாரும் இல்லாத நேரத்தில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இந்தத் தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும், கடையிலிருந்து தோசை கல் , புரோட்டா மேடைகளையும் உடைத்து கீழே தள்ளி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!