ETV Bharat / state

பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் - திருப்பூர் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர்: அரசு அலுவலர்களின் கார் டயரில் காற்றை பிடுங்கியதாக 19 விவசாயிகள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறக் கூறி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Sep 25, 2020, 8:50 AM IST

விருதுநகர் மாவட்டம் முதல் கோவை மாவட்டம்வரை 765 கி.வோ மின் பாதை புதியதாக அமைக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே சங்கரண்டாம் பாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் மின்கோபுரம் அடிதளம் அமைக்கும் பணிகள் செய்ய கடந்த 23ஆம் காரில் அலுவலர்கள் சென்றுள்ளனர்.

tiruppur farmers protest against false case which is filed on them
விவசாயிகள்

அப்போது அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள் அவர்களிடம், இங்கு வேலை செய்ய மாவட்ட ஆட்சியரின் அனுமதி கடிதம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அலுவலர்கள் கிளம்பியபோது அவர்கள் வந்த காரின் டயரில் காற்று இல்லாததைக் கண்டு அலுவலர்கள் ஆவேசம் அடைந்து விவசாயிகள் மீது ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், காவல் துறையினர் 19 விவசாயிகள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை

இந்த பொய் வழக்குகளை வாபஸ் பெறக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை காவல் கண்காணிப்பாளரின் உறுதிமொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: தன்னை விவசாயி என கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார் முதலமைச்சர் - கனிமொழிஆம

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.