ETV Bharat / state

போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்! - தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!

பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் வடமாநில இளைஞர் ஒருவர் திடீரென போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மேல் ஏறி தலைகீழாகத் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்!

author img

By

Published : Apr 23, 2021, 8:36 AM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள சிக்னல் கம்பத்தின் மீது வடமாநில இளைஞர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியே சென்ற கனரக லாரி ஒன்றை நிறுத்தி அதன் உதவியுடன் அந்த இளைஞரை கீழே இறக்க முயற்சி செய்தனர். அதற்குள் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அந்த நபரை மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், " தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பிகாரைச் சேர்ந்த காகேஸ்வர் பெகரா என்பவர் என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் காரணம்பேட்டை பகுதியில் அவரது செல்போன், ஓட்டுனர் உரிமங்களை அடையாளம் தெரியாத நபர் வழிப்பறி செய்து அவரைத் தாக்கியதும் தெரியவந்தது.

தொடர்ந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்த இவர் திடீரென, தனக்கு ஓட்டுநர் உரிமம் தேவை, கல்குவாரியில்தான் வேலை செய்த இடத்தில் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை, இதனால், என் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது, அதனால்தான் தற்கொலை மிரட்டல் விடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் காவல்துறையினர் அவரைத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 2,104 பேர் பலி - இந்தியாவை மிரட்டும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.