ETV Bharat / state

பிறந்த நாள் சேமிப்பை நிவாரண நிதிக்காக கொடுத்த பள்ளி மாணவி

திருப்பூர்: தாராபுரம் பகுதியில் பிறந்த நாள் விழாவிற்கு வைத்திருந்த பணத்தை கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பள்ளி மாணவியைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தார், சார் ஆட்சியர்.

tiruppur School student coronavirus relief fund
School student coronavirus relief fund
author img

By

Published : Apr 19, 2020, 4:54 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன், ரேகா தம்பதிக்கு சுஜி என்கிற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளும், தீபஸ்ரீ எனும் எட்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

தனியார் பள்ளியில் படித்து வரும் சுஜிக்கு, வரும் ஏப்ரல் 27ஆம் தேதி பிறந்த நாள் வருகிறது. இந்த ஆண்டு, தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக 5 ஆயிரத்து 180 ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இதனிடையே கரோனா நோயினால் பொதுமக்கள் உலகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்ய கோரிக்கை விடுத்திருந்தது.

சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்காக கொடுத்த பள்ளி மாணவி

இதையறிந்த சுஜி தனது பிறந்தநாள் செலவிற்கென வைத்திருந்த பணத்தை, தமிழ்நாடு அரசுக்கு நிவாரணமாக வழங்கும் நோக்கத்தில், தாராபுரம் சார் ஆட்சியர் பவன் குமாரிடம் வழங்கினார்.

நிவாரண பணத்தை சார் ஆட்சியர் நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, சுஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடமாடும் உரக்கடையை தொடக்கி வைத்த வேளாண் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.