திருப்பூர் மாவட்டம், மன்னரை பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தம்பி என்பவருக்குச் சொந்தமான திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சாம்பி என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருந்து.
இந்நிலையில், மதுபோதையில் இருவர் டிக்கெட் கேட்டு வந்துள்ளனர், அவர்கள் போதையில் இருந்த காரணத்தால் திரையரங்கு நிர்வாகத்தினர் டிக்கெட் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்த, காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியேறிய நிலையில். போதையில் வந்திருந்த இருவரில் ஒருவர் தன் கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டரின் மீது வீசியுள்ளனர். இது நுழைவு வாயில் முன்பு விழுந்ததால், திரையரங்கிற்கு எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை.
புகாரின் பேரில், குண்டு வீசிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துரையினர் தேடி வருகின்றனர்.