ETV Bharat / state

முதலமைச்சர் வெட்கப்பட வேண்டும்: எம்.பி. ஜோதிமணி - எடப்பாடி பழனிசாமி

திருப்பூர்: விவசாயி என்று சொல்லிக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

ஜொ
ஜொ
author img

By

Published : Feb 27, 2020, 11:51 AM IST

தமிழ்நாட்டில் தமிழகத்தில் மொத்தம் 13 மின் திட்டங்களை தமிழ்நாடு மின்புனரமைப்பு கழகமும் , பவர்கிர்ட் நிறுவனமும் இணைந்து 14 மாவட்டங்களில் செயல்படுத்திவருகிறது. இதேபோல் , கெயில் திட்டமும் , ஐ.டி.பி.எல் திட்டமும் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தியும் உள்ளது.

இந்நிலையில் இந்த மூன்று திட்டங்களும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த மூன்று திட்டங்களுக்கும் எதிரான கூட்டியக்கங்களின் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் , திருப்பூர் எம்.பி. சுப்பராயன், கரூர் எம்.பி. ஜோதிமணி , ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி , பொள்ளாச்சி சண்முகசுந்தரம் , நாமக்கல் எம்.பி சின்ராஜும் பொதுக்கூட்டதில் கலந்து கொண்டார்.

திருப்பூர் பொதுக்கூட்டம்

இதில் பேசிய பொதுக்கூட்டத்தில் பேசிய ஜோதிமணி , விவசாயிகளின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்பதோடு , திட்டத்தின் பாதிப்புகள் குறித்தும் பேசினார். பிறகு பேசிய சுப்பராயன் , மத்திய அரசின் பொருளாதார கொள்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதோடு சேர்ந்து , இந்திய விவசாயத்தை காப்பாற்றுவது மத்திய அரசின் கொள்கை அல்ல , பன்னாட்டு நிறுவனங்களுக்கான அரசாக உள்ளதாகவும் கூறினார். அடுத்ததாக பேசிய கணேசமூர்த்தி , மின்சாரத்தை புதைவடமாக கொண்டு செல்ல சாத்தியம் இருந்தும் அரசு அதை செய்ய மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். மாநில அரசு இந்தத் திட்டங்களில் தலையிட்டிருந்தால் இவைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.