திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள காரத்தொழுவு, சங்கரமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை கால்நடை பராமரிப்புதுறை அமைச்சரும் அரசு கேபிள் டி.வி.தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது சங்கரம நல்லூர் பகுதியில் நலிந்த நாதஸ்வர கலைகள் மேள தாளத்துடன் வந்து கரோனாவால் நிலைகுலைந்த தங்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவிட மனுகொடுத்தனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது;
வெட்டுக்கிளி உள்ளிட்ட எவை வந்தாலும் சமாளிக்க கூடிய வல்லமை நமது மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் உள்ளது. மேலும் 28 நாட்களாக திருப்பூர் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது. ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள் தங்குதடையின்றி நடைபெற்று வருவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. மேலும், விடுபட்டுள்ள சாலை பணிகள் உள்பட அனைத்தும் நடைபெற்றுவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'திருடனுக்குத் தேள்கொட்டியது போல... பதற்றத்தில் பொய் கூறிவரும் திமுகவினர்!'