கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, திருப்பூரில் தங்கி பணிபுரிந்துவரும் ஒரு லட்சத்திற்கும் மேலான புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இரண்டாவது நாளாக இன்று பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் வருவாய் துறையினர் ஆர்பாட்டக்காரர்களை அருகில் உள்ள அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் புஷ்பா ரவுண்டானா பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இவ்வளவு நாள் பொறுமையா இருந்துட்டோம்; எங்கள எங்க ஊருக்கு அனுப்புங்க' - புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனைக் குரல்