ETV Bharat / state

வடமாநிலத்தில் ஊரடங்கு: திருப்பூரில் காடா துணிகள் தேக்கம்! - காடா துணி உற்பத்தி நிறுத்தம்!

திருப்பூர்: கரோனா பரவல் காரணமாக வடமாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.400 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன.

ஊரடங்கு காரணமாக திருப்பூரில் காடா துணி உற்பத்தி நிறுத்தம்!

author img

By

Published : Apr 17, 2021, 10:22 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டாவது அலை கரோனோ பரவல் காரணமாக ஜவுளி உற்பத்தியை செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

வட மாநிலங்களான மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடமாநிலத்திலிருந்து கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்துவிட்டு, இனிமேல் எந்த ஜவுளிகளையும் அனுப்ப வேண்டாம் என தெரிவிக்கப்படுள்ளன.

இதனால், திருப்பூர், கோவை மாவட்டத்தில் காடா துணி உற்பத்தி பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் விசைத்தறிகள், ஸ்பின்னிங் மில்ஸ், OE, சைசிங், வைண்டிங் என பல்வேறு நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று பலனடைந்து வருகின்றனர்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தத் தொழிற்கூடங்களில் மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டும், தற்போது கையிருப்பில் உள்ள மூலப் பொருட்கள் தீரும் வரை மட்டுமே தொழிற் கூடங்களை இயக்க உள்ளதாகவும், பின்னர் உற்பத்தியை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக திருப்பூரில் காடா துணி உற்பத்தி நிறுத்தம்!

தற்போது, காடா துணிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் அனைத்தும் தொழிற்சாலைகளில் தேக்கம் அடைந்துள்ளது. அதன்காரணமாக ரூ.400 கோடி மதிப்பிலான ஏற்றுமதி துணிகள் தொடர்ந்து பத்தாவது நாளாகவும் தேக்கம் அடைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் காடா துணிகள் அந்த தந்த மாநிலங்களில் பெற்றுக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வேலை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தகனம்செய்யப்பட்ட விவேக்கின் உடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.