திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, அவிநாசி,பெருமாநல்லூர், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை ஆண்டுதோறும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு பெய்ததன் காரணமாக மானாவாரி நிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டிருந்தனர்.
தற்போது நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ள நிலையில்,பருவ நிலை மாற்றம் காரணமாக விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உற்பத்தியும் குறைவாக உள்ளது.தற்பொழுது காய்ந்த நிலக்கடலை கிலோ 42 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒரு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட 16 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில்,காய்ந்த நிலக்கடலையின் குறைந்தபட்ச விலையை 65 ரூபாய் ஆகவும்,பச்சை நிலக்கடலை விலை 40 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: