நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா, "தமிழ்நாடு அரசு கடவுள் நம்பிக்கை உள்ள அரசாக இருக்கிறது. இருப்பினும், இந்து விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாக சந்தேகம் உள்ளது. அவர்களுக்கு விநாயகர் நல்லறிவை தருவார், தமிழ்நாடு அமைதியாக இருக்க இந்து முன்னணி விநாயகரிடம் பிரார்த்தனை செய்யும்" என தெரிவித்தார்.