ETV Bharat / state

திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை! - tirupur city police

Tiruppur Family Murder: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீட்டின் அருகே மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 10:44 PM IST

Updated : Sep 4, 2023, 3:14 PM IST

திருப்பூர்: பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த மது போதை ஆசாமி அரிவாளால் வெட்டியதில் செந்தில் குமார், மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார், செந்தில்குமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவரின் உடல்களை எடுக்க விடாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலையாளியை கைது செய்த பிறகு தான் மற்ற மூவரின் உடல்களையும் எடுக்க விடுவோம் எனக் கூறி உறவினர்களும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் அருகே மது குடித்ததை தட்டி கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சரண்டர்.. பரபரப்பு பின்னணி!

Last Updated : Sep 4, 2023, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.