திருப்பூரை அடுத்த பெரியநாதம்பாளையத்தில் மயில்சாமி என்பவர் வாடகை குடோனில் பயன்படுத்தாத பனியன் துணியை அறைத்து நூலாக்கும் மில்லை நடத்தி வருகிறார். நேற்று (அக்.21) இரவு தொழிலாளர்கள் பணி முடிந்து மில்லை பூட்டி விட்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று (அக்.22) காலை மின்கசிவு காரணமாக மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சில் பிடித்த தீ மளமளவென மில் முழுவதும் பரவியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மில்லில் இருந்த பஞ்சுகள், நூல்கள், இயந்திரங்கள் என சுமார் ரூ. 60 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதையும் படிங்க: கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து!