ETV Bharat / state

உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு: வட்டாட்சியர் சிறைப்பிடிப்பு! - பவர் கிரிட் அதிகாரிகள்

திருப்பூர்: வாவி பாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், வேறொரு இடத்திலும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்க முயற்சித்த பவர்கிரீட் அலுவலர்கள், வட்டாட்சியரை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.

உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரை சிறைபிடித்த விவசாயிகள்

author img

By

Published : Sep 4, 2020, 4:33 PM IST

மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் மேற்கு, வட மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலம் வழியாகச் செயல்படுத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைநிலம் வழியாக மின் கோபுரங்கள் கொண்டுசெல்வதற்குப் பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டுசெல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து தற்போது உயர்மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் மீண்டும் அதே கிராமத்தில் மாற்று வழியாக ஒரு உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை இன்று பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் தலைமையில், பவர்கிரீட் நிறுவன அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள், ஏற்கனவே விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, உயர்மின் கோபுர பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், மீண்டும் விளைநிலத்தில் எதற்காக அளவீட்டுப் பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன என வட்டாட்சியர், அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே வேளாண்மை விளைநிலத்தை இழந்த நிலையில் மீண்டும் நிலத்தை இழக்க முடியாது எனவும் அளவீட்டுப் பணியை செய்யவிட மாட்டோம் என விவசாயிகள் கூறினர்.

இது குறித்து அரசு அலுவலர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பவர் கிரீட் அலுவலர்கள் கூறினர். ஆனால் கண்டிப்பாக எங்கள் பகுதியில் அளவீட்டுப் பணிகள் செய்யக்கூடாது என விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.