திருப்பூர்: குடிபோதையில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது மோதியதில் 7 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கதிரவன் என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். லாரி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி எதிரே வந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார்த்திகேயன், அவரது மனைவி சரண்யா, 7 வயது மகள் தனிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .
மேலும் மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் லாரி ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.