திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், சிக்காம்பாளையம் பகுதியில், பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
![பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-congresstnleaderpressmeet-vis-7204381_20082020141551_2008f_1597913151_108.jpg)
இதில் கலந்து கொண்ட கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நவ. 20ஆம் தேதி இதே தொகுதியில் அரசியல் மாநாடு நடத்துவோம். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் அந்த மாநாடு, எடப்பாடி அரசை வீட்டிற்குத் தூக்கி எறியும் மாநாடாக அமையும்.
காங்கிரசில் உள்ள அனைத்து தொண்டர்களும் ராகுலைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ராகுல்தான் எங்களின் நிரந்தரத் தலைவர்.
அதிமுகவில் முதலமைச்சர் ஒருவர் இருக்கும்போதே அவரது இடத்தைப் பிடிக்க மற்றவர் முயலுவது மோசமான செயல். அவர்கள் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
எங்களுடையது கொள்கையால் இணைந்த கூட்டணி. எங்களுடைய கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்தான். கூட்டணியின் மற்ற கட்சித் தலைவர்கள் இதனை முறைப்படி அறிவிப்பார்கள்.
தென் தமிழ்நாடு வளர வேண்டும் என்றால் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றும் நடவடிக்கை வரவேற்கக்கூடியதுதான். மாநிலம் வளர்ச்சி அடைய திருச்சியை மூன்றாவது தலைநகராகக்கூட ஆக்கலாம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்களை அனுமதிக்க மாட்டோம்’ - இந்து மக்கள் கட்சியுடன் ஆதித்தமிழர் கட்சியினர் வாக்குவாதம்!