ETV Bharat / state

தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து ரூ.2 லட்சம் பொருள்கள் சேதம் - etv news

பல்லடத்தில் தேநீர் கடையில் திடீரென சிலிண்டர் வெடித்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

author img

By

Published : Mar 16, 2021, 2:16 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அங்காளம்மன் கோயில் அருகே ஞானாம்பிகை என்பவருக்கு சொந்தமான தேநீர் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் ஓடி வந்தனர். உடனே, தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், இந்த விபத்தில் டீக்கடை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின. விசாரணையில், ’’கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும், அருகில் இருந்த அரசு மருந்தகத்திலும் விபத்து ஏற்பட்டது.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்திற்காக கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.