திருப்பூர் இடுவம்பாளையம் குட்டைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (58). கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள், பாலாமணியை கொலை செய்து வீட்டிலிருந்த 43 பவுன் தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது நண்பர் அருள் ஜோ ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:
'நெகிழி கொடுத்தால் எலெக்ட்ரிக் சைக்கிள் பரிசு' - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதி